Monday, 22 August 2011

ஹசாரேவின் உண்ணாவிரதத்தில் கலந்துகொள்ள 112 வயது நபர் விருப்பம்

பானாஸ்கந்தா, ஆக.22: அண்ணா ஹசாரேவின் உண்ணாவிரதத்தில் கலந்துகொள்ள குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த 112 வயதுடைய நபர் ஒருவர் விருப்பம் தெரிவித்துள்ளார்.

குஜராத் மாநிலம் பானாஸ்கந்தாவில் வாவ் தாலுக்காவைச் சேர்ந்தவர் ராஞ்ச்ஹோட் தேசாய். இவர் இந்தியா-பாகிஸ்தான் போரின்போது இந்திய ராணுவத்தில் பணியாற்றிவர். ஊழலுக்கு எதிராக அண்ணா ஹசாரே போராடி வருவதைக் கேள்விப்பட்ட தேசாய் அவருடன் சேர்ந்து தானும் உண்ணாவிரதம் இருக்க விருப்பம் தெரிவித்துள்ளார்.
ஊழல் மக்களின் பிடியில் இருந்து இந்த நாட்டை விடுவிக்க அண்ணா ஹசாரே சிறந்த பணியைச் செய்து வருகிறார். அவருடன் நானும் இணைய விரும்புகிறேன் என தேசாய் குறிப்பிட்டார்.
எனினும் முதிய வயது காரணமாக உண்ணாவிரதம் மேற்கொள்ள வேண்டாம் என தனக்கு கூறப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
இருப்பினும் ஒருநாள் உண்ணாவிரதம் இருந்த இவர் தில்லியில் ராம்லீலா மைதானத்தில் உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கியதில் இருந்து ஹசாரேவின் வெற்றிக்காக பிரார்த்தனை செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment