Sunday, 28 August 2011

ஊழலுக்கு எதிரான போராட்டம் தொடரும்: ஹசாரே


28 Aug 2011 12:32:36 PM IST

புதுதில்லி, ஆக.28: அமைப்புமுறையில் ஒரு மாற்றம் ஏற்படும்வரையில் ஊழலுக்கு எதிரான போராட்டம் தொடரும் என அண்ணா ஹசாரே தெரிவித்தார்.
ஊழலுக்கு எதிராக உண்ணாவிரதம் இருந்துவந்த ஹசாரே 288 மணி நேர உண்ணாவிரதத்துக்குப் பிறகு இன்று தனது உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டார்.
ஜன்லோக்பால் மசோதா தொடர்பாக நாடாளுமன்றம் முடிவெடுக்க வைத்தது மக்கள்சக்திதான் என அவர் மக்களுக்கு நன்றி தெரிவித்தார்.
சரியான ஜனநாயகம் என்பது மக்களின் கைகளுக்கு அதிகாரம் வருவதுதான் என அவர் குறிப்பிட்டார்.
ஊடகத்தினருக்கும் நன்றி தெரிவித்த ஹசாரே, அவர்களின் பங்களிப்பால்தான் ஊழலுக்கு எதிரான போராட்டம் பெரிய அளவில் வெற்றிபெறுவது சாத்தியமானது என்றார்.
ஏழைகளின் கல்வி, சுற்றுச்சூழல் பாதிப்பு உள்ளிட்ட விவகாரங்களிலும் கவனம் தேவைப்படுகிறது என ஹசாரே வலியுறுத்தினார்.
நான் அண்ணா என்ற வாசகங்கள் அடங்கிய குல்லா மட்டுமே உங்களை அண்ணாவாக்காது. உங்கள் வாழ்க்கை முறையில் மாற்றம் தேவை. கறைபடியாத வாழ்க்கையை வாழுங்கள். தூய எண்ணங்களுடன் இருங்கள். அன்பு மற்றும் சகிப்புத்தன்மையை கற்றுக்கொள்ளுங்கள் என அண்ணா ஹசாரே கூறினார்.

No comments:

Post a Comment