Sunday, 28 August 2011

மருத்துவமனையில் அண்ணா ஹசாரே

புதுதில்லி, ஆக.28: 12 நாள் உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்ட மருத்துவ பரிசோதனைக்காக குர்காவோனில் உள்ள மேதாந்தா மருத்துவமனைக்குக் அழைத்துச் செல்லப்பட்டார்.

மேதாந்தா மருத்துவமனையில் டாக்டர்கள் குழு ஒன்று அவரது உடல்நிலையை தீவிரமாக கண்காணித்து வருகிறது.
ஆகஸ்ட் 16-ம் தேதி உண்ணாவிரதம் தொடங்கியதில் இருந்து இன்றுவரை அவர் 8 கிலோ எடை குறைந்துள்ளார்.
இன்று காலை 10.20 மணியளவில் ஹசாரே தனது உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டார். 2 சிறுமிகள் இளநீர் கொடுத்து அவரது உண்ணாவிரதத்தை முடித்துவைத்தனர்.

No comments:

Post a Comment